தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- பூண்டு
- மிளகாய் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
100 கிராம் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், அதனுடன் இரண்டு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின்னர், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், நான்கு ஸ்பூன் அரிசி மாவு, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
