தேவையான பொருட்கள்
- தயிர்
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- கடுகு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு சின்ன வெங்காயம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆறிய பின்னர், ஒரு கப் தயிருடன் சேர்த்து கலந்து, மேலும் அதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
