பாசிப்பருப்பு போண்டா


தேவையான பொருட்கள் 

  • பாசிப்பருப்பு 
  • கடலை மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • சோம்பு 
  • மிளகாய் தூள்  
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 


செய்முறை 

முதலில், 1/4 கப் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், 1/2 கப் கடலை மாவு, வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, 1/4 கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பின், எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post