தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- மைதா
- ரவை
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- தேங்காய்
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
முதலில், 1/4 கப் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், 1/2 கப் மைதா, நான்கு ஸ்பூன் ரவை, வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை, 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் இருந்து கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பின், போண்டாவாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
