முட்டை பக்கோடா


தேவையான பொருட்கள் 

  • முட்டை 
  • கடலை மாவு 
  • அரிசி மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • சோம்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை


செய்முறை 

முதலில், இரண்டு முட்டையை வேக வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், 100 கிராம் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், தயார் செய்து வைத்துள்ள முட்டை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பின், சிறிது சிறிதாக எண்ணியல் போட்டு பக்கோடாவாக பொரிக்கவும்.

Previous Post Next Post