புதினா பக்கோடா


தேவையான பொருட்கள் 

  • புதினா 
  • கடலை மாவு 
  • பொட்டுக்கடலை 
  • சோம்பு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள்
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

பாத்திரத்தில், ஒரு கப் கடலை மாவு, ஒரு கப் பொடியாக நறுக்கிய புதினா, நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post