தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- கீரை
- கடலை மாவு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 200 கிராம் கடலை மாவு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
100 கிராம் பாசிப்பருப்பு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு, ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடித்து, கரைத்து வைத்துள்ள கடலை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
