பாசிப்பருப்பு-கீரை வடை


தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு
  • கீரை
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • இஞ்சி
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள் 
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், 100 கிராம் பாசிப்பருப்பை‌ வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை, வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, 1/4 கப் கடலை மாவு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post