கத்தரிக்காய் கிரேவி


தேவையான பொருட்கள் 

  • கத்தரிக்காய் 
  • சின்ன வெங்காயம் 
  • தக்காளி 
  • தனியா தூள் 
  • சீரகம் 
  • காய்ந்த மிளகாய் 
  • புளி 
  • தேங்காய் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • வெந்தயம்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

முதலில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‌ 

வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் தனியா தூள், சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள்‌ தூள் சேர்த்து வதக்கவும். 

பின்னர், 1/2 கப் நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

மேலும், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து ஒரு நிமிடம் கொதித்த பின், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post