ரைஸ்-நூடுல்ஸ்



தேவையான பொருட்கள் 

  • பாஸ்மதி சாதம் 
  • நூடுல்ஸ் 
  • முட்டைக்கோஸ் 
  • முட்டை 
  • ரெட் சில்லி சாஸ் 
  • சோயா சாஸ் 
  • இஞ்சி-பூண்டு விழுது
  • கறி மசாலா தூள் 
  • மட்டன் மசாலா தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • குடைமிளகாய் 
  • உப்பு
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், ஒரு கப் நூடுல்ஸ் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய், இரண்டு முட்டை உடைத்து ஊற்றி‌ முட்டை பொரியும் வரை நன்கு கிளறவும்.‌ 

அதனுடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 
வதங்கிய பின், வேக வைத்துள்ள நூடுல்ஸ், 1/4 கப் பாஸ்மதி அரிசி சாதம், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

பின்னர், ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், நான்கு ஸ்பூன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post