தேவையான பொருட்கள்
- பலாக்கொட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடலைப்பருப்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
300 கிராம் பலாக்கொட்டையை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு மசித்து வைத்துள்ள பலாக்கொட்டை, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து ஐந்து நிமிடம் கலந்து விட்டு இறக்கவும்.
