கருவாடு கெட்டி குழம்பு


தேவையான பொருட்கள் 

  • கருவாடு
  • சின்ன வெங்காயம் 
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • சீரகம் 
  • தனியா தூள் 
  • மஞ்சள் தூள்
  • வெந்தய பொடி
  • வெந்தயம் 
  • புளி‌
  • காய்ந்த மிளகாய் 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 


செய்முறை 

முதலில், கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய்,‌ இரண்டு ஸ்பூன் சீரகம், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். ஆறிய பின், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

மேலும், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

பின்னர், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின், 1/4 கப் சுத்தம் செய்த கருவாடு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

மேலும், 1/4 ஸ்பூன் வெந்தய பொடி, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post