பாகற்காய் சூப்


தேவையான பொருட்கள் 

  • பாகற்காய் 
  • மிளகுத்தூள் 
  • நாட்டுச் சர்க்கரை 
  • பூண்டு 
  • சீரகம் 
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

பாத்திரத்தில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், 50 கிராம் பொடியாக நறுக்கிய பாகற்காய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு-1/4 ஸ்பூன் சீரகம் (ஒன்று-இரண்டாக தட்டி சேர்க்கவும்) சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

Previous Post Next Post