தேவையான பொருட்கள்
- முட்டை
- மைதா
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இட்லி பொடி
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு முட்டை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு, 50 கிராம் மைதா, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பின், தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய், இட்லி பொடி சேர்த்து வேக வைக்கவும்.
