தேவையான பொருட்கள்
- மட்டன்
- சாதம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- மட்டன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 100 கிராம் பொடியாக நறுக்கிய மட்டன், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்ந்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள மட்டன், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
