சிக்கன் சாதம்


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சாதம்
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • தக்காளி 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • சோம்பு 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், 100 கிராம் பொடியாக நறுக்கிய சிக்கன், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்ந்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், வேக வைத்துள்ள சிக்கன், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post