தேவையான பொருட்கள்
- கீரை
- முட்டை
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- மிளகுத்தூள்
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர், இரண்டு முட்டை உடைத்து சேர்த்து முட்டை நன்கு வேகம் வரை கலந்து விடவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
