கருப்பு உளுந்து அடை தோசை


தேவையான பொருட்கள் 

  • கருப்பு உளுந்து 
  • கடலைப்பருப்பு 
  • துவரம் பருப்பு 
  • அரிசி
  • சோம்பு
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • பூண்டு
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • நல்லெண்ணெய் 


செய்முறை 

1/2 கப் கருப்பு உளுந்து, 1/4 கப் துவரம் பருப்பு, 1/4 கப் கடலைப்பருப்பு, 1/4 கப் அரிசி சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். 

அதனுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், அரைத்து வைத்துள்ள மாவுடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் இட்லி பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

Previous Post Next Post