ஸ்வீட் கார்ன் அடை தோசை


தேவையான பொருட்கள் 

  • ஸ்வீட் கார்ன் 
  • தோசை மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • சீரகம் 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், 1/2 கப் ஸ்வீட் கார்ன் வேக‌ வைத்து, ஆறிய‌ பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 
அதனுடன், 1/2 கப் தோசை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் இட்லி பொடி தூவி கொள்ளலாம்.
Previous Post Next Post