தேவையான பொருட்கள்
- ஸ்வீட் கார்ன்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- கடுகு
- கடலைப்பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 1 கப் ஸ்வீட் கார்ன் தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், 1 கப் தண்ணீர்(தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்), தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
