தேவையான பொருட்கள்
- அரிசி
- புளி
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- வேர்க்கடலை
- கடுகு
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் அரிசியை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஐந்து காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு ஸ்பூன் வேர்க்கடலை, 10 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், தயார் செய்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கெட்டியாகும் வரை கலந்து விட்டு அடுப்பை நிறுத்திவிட்டு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
