தக்காளி உப்புமா


தேவையான பொருட்கள் 

  • ரவை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி 
  • காய்ந்த மிளகாய் 
  • கடுகு 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், 2 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். 

இறுகியவுடன், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post