பொட்டேட்டோ பிரட் ரோல்


தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு 
  • பிரட்
  • மைதா 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • இஞ்சி 
  • கறி மசாலா தூள் 
  • சோம்பு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 


செய்முறை 

300 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை நீக்கி விட்டு, மசித்து எடுத்துக் கொள்ளவும்.‌

அதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், ஒரு பாத்திரத்தில், இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின்னர், பிரட் துண்டை நான்கு ஓரங்களையும் நீக்கி விட்டு, தயார் செய்து வைத்துள்ள மைதா கலந்த தண்ணீரில் லேசாக நனைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சிறிதளவு வைத்து, பிரட் துண்டை நன்கு ரோல் செய்து, கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.

Previous Post Next Post