பருப்பு பொரியல்


தேவையான பொருட்கள் 

  • துவரம் பருப்பு 
  • கடலைப்பருப்பு 
  • பாசிப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம்  
  • சோம்பு 
  • கடுகு
  • மிளகாய் தூள்  
  • மஞ்சள் தூள்
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், 1/2 கப் துவரம் பருப்பு, 1/2 கப் கடலைப்பருப்பு, 1/4 கப் பாசிப்பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும். 

பின், அரைத்து வைத்துள்ள பருப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post