ஸ்வீட் கார்ன் இனிப்பு தோசை


தேவையான பொருட்கள் 

  • ஸ்வீட் கார்ன் 
  • தோசை மாவு 
  • மைதா 
  • நாட்டுச் சர்க்கரை 
  • ஏலக்காய் பொடி 
  • நெய் 

செய்முறை 

முதலில், 1/4 கப் ஸ்வீட் கார்ன், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.‌ 

அதனுடன், 1/4 கப் மைதா, 1/4 கப் தோசை மாவு, 1/4 கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

பின், தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
Previous Post Next Post