தேவையான பொருட்கள்
- ரவை
- தயிர்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கேரட்
- பீன்ஸ்
- அரிசி மாவு
- பெருங்காயத்தூள்
- சமையல் சோடா
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ரவை, 1/2 கப் தயிர் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைத்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சிறிதளவு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள ரவையில் சேர்த்து மேலும், தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டு 30 நிமிடம் வைக்கவும்.
பின்னர், தாளிப்பு கரண்டியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.
