தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- உருளைக்கிழங்கு
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- ஏலக்காய்
- பட்டை
- பிரியாணி இலை
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், குக்கரில் ஒரு கப் பாசிப்பருப்பு, 100 கிராம் உருளைக்கிழங்கு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், வேக வைத்த உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு மசித்து கொள்ளவும்.
பின்னர், ஒரு கப் துருவிய தேங்காய், ஐந்து பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, 1/2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து, வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
