தேவையான பொருட்கள்
- பச்சரிசி மாவு
- இட்லி பொடி
- தேங்காய்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில், ஒரு கப் பச்சரிசி மாவு, 1/2 ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை 30 நிமிடம் வைத்து பின், சிறிய உருண்டையாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டை சேர்த்து கலந்து விடவும்.
பின், ஐந்து ஸ்பூன் இட்லி பொடி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
