மசாலா சாம்பார்

தேவையான பொருட்கள் 

  • துவரம் பருப்பு 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு
  • புளி 
  • தக்காளி 
  • சின்ன வெங்காயம் 
  • முருங்கைக்காய் 
  • கத்தரிக்காய் 
  • தனியா 
  • சீரகம் 
  • மிளகு 
  • வெந்தயம் 
  • அரிசி
  • தேங்காய் 
  • காய்ந்த மிளகாய் 
  • பெருங்காயத்தூள் 
  •  மஞ்சள் தூள் 
  • கடுகு
  • உப்பு
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • நல்லெண்ணெய் 

செய்முறை 

முதலில், கடாயில், இரண்டு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் அரிசி, ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இறுதியாக, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து‌ விட்டு இறக்கவும்.‌

வறுத்து வைத்த பொருட்களுடன், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், 200 கிராம் துவரம் பருப்பு, இரண்டு தக்காளி, தண்ணீர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும். 

பின், கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், பத்து சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், 1/2 டம்ளர் புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள மசாலா, மசித்து வைத்துள்ள பருப்பு, தேவைப்பட்டால் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.
Previous Post Next Post