தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய்
- தேங்காய்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள தேங்காய், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
