இட்லி பஞ்சு போல இருக்க நான்கு டிப்ஸ்


1) இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு நனைத்த அவல் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல இருக்கும். 

2) இட்லி மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல மிருதுவாக இருக்கும். 

3) இட்லி மாவு அரைத்து முடித்த பின், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்தால் இட்லி பஞ்சு போல இருக்கும். 

4) இட்லி மாவுக்கு அரிசி ஊற வைக்கும் பொழுது 500 கிராம் அரிசிக்கு 50 கிராம் ஜவ்வரிசி என்ற அளவில் ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மிருதுவாக இருக்கும்.
Previous Post Next Post