தேவையான பொருட்கள்
- தக்காளி
- தேங்காய்
- பூண்டு
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- புளி
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ¼ கப் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
ஆறிய பின், சின்ன நெல்லிக்காய் அளவு புளி, ¼ கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், கடாயில், ஐந்து நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, இரண்டு நறுக்கிய காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சட்னியை தாளித்துக் கொள்ளவும்.
