தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை
- காய்ந்த மிளகாய்
- கடலை மாவு
- அரிசி மாவு
- பெருங்காயத்தூள்
- ஓமம்
- நல்லெண்ணெய்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில், ஒரு கப் கறிவேப்பிலை, நான்கு காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு கப் அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் ஓமம், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், நான்கு ஸ்பூன் சூடான நல்லெண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பின், முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
