தக்காளி தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள் 

  • சாதம்
  • தேங்காய் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம்
  • கடலைப்பருப்பு
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேத்து வதக்கவும். 

பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Previous Post Next Post