தேவையான பொருட்கள்
- சேமியா
- தயிர்
- இஞ்சி சாறு
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் சேமியா வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சேமியாவுடன், 1/2 கப் தயிர், 1/4 ஸ்பூன் இஞ்சி சாறு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சேமியாவை தாளித்துக் கொள்ளவும்.
