கேரட்-பீன்ஸ் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • கேரட் 
  • பீன்ஸ் 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி 
  • சோம்பு 
  • பூண்டு 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், 1/4 கப் தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், அரைத்து வைத்துள்ள தேங்காய், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.‌
Previous Post Next Post