தேவையான பொருட்கள்
- சாதம்
- எலுமிச்சை சாறு
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- வேர்க்கடலை
- கடுகு
- கடலைப்பருப்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், 1/4 கப் தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி 1/2 ஸ்பூன், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டு, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், மூன்று ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரைத்து வைத்துள்ள தேங்காய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
