தேவையான பொருட்கள்
- சாதம்
- மிளகு
- தயிர்
- பால்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் சாதம், 1/4 கப் தயிர், 1/4 டம்ளர் பால், தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் ஒன்றிரண்டாக தட்டிய மிளகு சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சாதத்தை தாளித்துக் கொள்ளவும்.
