தேவையான பொருட்கள்
- சாதம்
- முட்டை
- மிளகு
- பூண்டு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு முட்டை உடைத்து ஊற்றி பொரியும் வரை நன்கு கிளறவும்.
பின், இரண்டு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
