தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய்
- மிளகாய் தூள்
- சாம்பார் தூள்
- சின்ன வெங்காயம்
- புளி
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- கடுகு
- வெந்தயம்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் நறுக்கிய முருங்கைக்காய், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/4 கப் புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
