தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- புளி
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு கப் கத்திரிக்காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், 1/4 கப் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
