தக்காளி மட்டன் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • மட்டன்
  • தக்காளி 
  • சின்ன வெங்காயம் 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • சோம்பு 
  • கடுகு 
  • மட்டன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • பச்சை மிளகாய் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகுத்தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி‌ சேர்த்து வதக்கி ஆறிய பின், 1/4 கப் தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், 500 கிராம் மட்டன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், அரைத்து வைத்துள்ள தக்காளி-சின்ன வெங்காய விழுது, தேவையான அளவு உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post