வாழைக்காய் பொடிமாஸ்


தேவையான பொருட்கள் 

  • வாழைக்காய் 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • கடலைப்பருப்பு 
  • மஞ்சள் தூள் 
  • பெருங்காயத்தூள் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், தோலை நீக்கி பொடியாக நறுக்கிய இரண்டு வாழைக்காயை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

பாதி அளவு வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.

பின், மசித்து வைத்துள்ள வாழைக்காய், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post