தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை
- ரவை
- கடலைப்பருப்பு
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- உளுந்து பருப்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ¼ கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் முருங்கைக்கீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
