வேர்க்கடலை புளிக்குழம்பு


தேவையான பொருட்கள் 

  • வறுத்த வேர்க்கடலை 
  • புளி
  • சாம்பார் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள் 
  • பூண்டு 
  • வெந்தயம் 
  • கறிவேப்பிலை 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 

செய்முறை 

முதலில், ¼ கப் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை, ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் வெந்தயம், பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ½ கப் புளிக்கரைசல், 1½ ஸ்பூன் சாம்பார் தூள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

பின், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.


Previous Post Next Post