தக்காளி கூட்டு


தேவையான பொருட்கள் 

  • பாசிப்பருப்பு 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • தேங்காய் 
  • சீரகம் 
  • பச்சை மிளகாய் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை 

செய்முறை 

முதலில், ¼ கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், வேக வைத்து மசித்த ¼ கப் பாசிப்பருப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு, ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

Previous Post Next Post