தேவையான பொருட்கள்
- தக்காளி
- மிளகு
- சீரகம்
- பூண்டு
- மஞ்சள் தூள்
- உப்பு
- கடுகு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், 1½ ஸ்பூன் மிளகு, ½ ஸ்பூன் சீரகம், ஆறு பல் பூண்டு கொரகொரப்பாக தட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும், மூன்று தக்காளி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, தட்டி வைத்துள்ள மிளகு-சீரகம்-பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தக்காளி, தேவையான அளவு உப்பு, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
