தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு கப் தோசை மாவுடன் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
