தக்காளி கொண்டைக்கடலை பொரியல்


தேவையான பொருட்கள் 

  • வெள்ளைக் கொண்டைக்கடலை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம்
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • தேங்காய் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், ஒரு கப் வெள்ளைக் கொண்டைக்கடலை, ¼ ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், 5‌ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின், வேக வைத்துள்ள வெள்ளைக் கொண்டைக்கடலை, ¼ கப் துருவிய தேங்காய், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும். 

Previous Post Next Post