தேவையான பொருட்கள்
- அரைக்கீரை
- துவரம் பருப்பு
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- பூண்டு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், 4 ஸ்பூன் துவரம் பருப்பு, 2 காய்ந்த மிளகாய், 2 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய அரைக்கீரை, ஒரு சிறிய தக்காளி, 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
